கூடுதல் கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ளலாம்! மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கலாம் என மாநிலங்களுக்கு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதால் மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் நிலமையை கருத்தில் கொண்டு தளர்வுகளை அளிக்கலாம் அல்லது கூடுதல் கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தினசரி புதிய பாதிப்புகள் மற்றும் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு, அவற்றை மதிப்பாய்வு செய்து, அதற்கேற்ப கூடுதல் கட்டுப்பாடுகளில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 21-ஆம் தேதி முதல் கொரோனா தொற்று குறைந்து வருவதாகவும், கடந்த வாரத்தில் தினசரி சராசரி பாதிப்பு 50,476 ஆக இருந்தது என்றும், தினசரி பாதிப்பு விகிதம் 3.63 விழுக்காடாக இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், கொரோனா தொற்று பாதிப்பு நிலவரத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் தினசரி நோய்த்தொற்றின் பரவலை மதிப்பாய்வு செய்ய வேண்டும் என்றும், கண்காணிப்பு, பரிசோதனை, சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா தடுப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Relaxation in covid restrictions


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->