குவைத் தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு!!
Relief announced to families of Indians who died in Kuwait fire
குவைத்தில் தொழிலாளர்கள் குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உரிழந்த இந்தியர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி தலைமையில் நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
குவைத் நாட்டில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்கப் பகுதியில் ஆறு மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்தக் குடியிருப்பில் 150க்கும் மேற்பட்டோர் வசித்து வந்தனர். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலையில் ஏற்பட்டதால், தீ விபத்தில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மேலும், 41 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் ஆவர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
உயிரிழந்த 41 பேர்களில் 2 தமிழர்களும் உள்ளனர். அவர்களின் உடலை தமிழகம் கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், குவைத் தீ விபத்தில் தமிழர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்குமாறு அயலக தமிழர் நலத்துறைக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்தநிலையில், குவைத்தில் தொழிலாளர்கள் குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உரிழந்த இந்தியர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி தலைமையில் நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உரிழந்தவர்களின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
English Summary
Relief announced to families of Indians who died in Kuwait fire