389 ரூ-க்கு வாடகை காதலன்; பெங்களூருவில் அதிர்ச்சி போஸ்டர்..! - Seithipunal
Seithipunal


உலக முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பெங்களூருவில் ஒரு நாள் வாடகை காதலன் குறித்த போஸ்டைர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பெங்களுருவில்  பல இடங்களில் காதலனை, ஒரு நாள் வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. 

இவ்வாறு நமது கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில்ஒரு நாள் வாடகை காதல் குறித்தபோஸ்டரை ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் மற்றும் சமூக நலன் விரும்பிகள் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

உலக நாடுகளில் வாடகை காதலன், காதலி கலாச்சாரம் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக சீனா, ஜப்பான் மற்றும் தாய்லாந்தில் காதலன் மற்றும் காதலியை வாடகைக்கு எடுத்துக் கொள்ளும் கலாசாரம் அதிகரித்து வருகிறது. 

பொது நிகழ்ச்சிகள், விருந்துகள் மற்றும் தனிமையை போக்குவதற்கு என இதற்கு பல காரணம் சொல்லப்படுகிறது. சமீப நாட்களாக இந்தியாவிலும் இதுபோன்ற கலாசாரம் அதிகரித்து வருகிகின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், இன்று காதலர் தினத்தை முன்னிட்டு பெங்களூருவில் பல இடங்களில் ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. அதில், ஒரு நாளைக்கு ரூ.389 என்ற கட்டணத்தில் காதலனை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் எனக்கூறப்பட்டு இருந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவின் ஜெயா நகர் பானா ஷங்கரி மற்றும் பிடிஏ காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட இடங்களில் குறித்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை புகைப்படம் எடுத்த அப்பகுதி மக்கள் அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். அத்துடன், நகரின் கலாசாரத்திற்கு மிரட்டல் விடுக்கும் வகையில் இந்த போஸ்டரை ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் குறித்த வாடகை காதலன் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rent a boyfriend for Rs 389


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->