10% இட ஒதுக்கீட்டின் தீர்ப்பு காங்கிரசுக்கு கிடைத்த வெற்றி!
reservation for upper classes was Congress victory
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தினை மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடங்கப்பட்ட வழக்குகளில் மத்திய அரசு கொண்டுவந்த சட்டம் செல்லும் என தீர்ப்பு வெளியானது. இது நிலையில் இதற்கு ஆதரவாகவும் எதிர்பாக்கவும் பல்வேறு தரப்பினர் மற்றும் அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன.
இதேபோன்று முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஜெயராம் ரமேஷ் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் "பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் 103 வது அரசியல் சாசன சட்ட திருத்தத்திற்கு அடித்தளமிட்டதே காங்கிரஸ் ஆட்சிதான்.
கடந்த 2005-2006ம் ஆண்டு கால கட்டத்தில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த பொழுது சின்கோ ஆணையம் அமைக்கப்பட்டதன் பலனாக சட்ட திருத்தத்திற்கு அடிதளமிட்டது காங்கிரஸ்தான். அந்த ஆணையம் கடந்த 2010 ஆம் ஆண்டு தனது அறிக்கையை தாக்கல் செய்தது. அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனையின் படி கடந்த 2014 ஆம் ஆண்டு 103வது அரசியல் சாசன திருத்த சட்ட மசோதா உருவாக்கப்பட்டது.
அதன் பின்னர் ஆட்சியில் அமைந்த மோடியின் தலைமையிலான பாஜக அரசு ஐந்து ஆண்டுகள் இந்த சட்ட திருத்தத்தினை கிடப்பில் போட்டுவிட்டு கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த சட்ட திருத்தத்தினை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. நான் மத்திய கிராமப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்தபோது சமூக பொருளாதார மற்றும் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு 2012 ஆம் ஆண்டு அது நிறைவடைந்தது. சாதி வாரிய மக்கள் தொகை புதிய கணக்கெடுப்பு எப்பொழுது நடத்தப்படும் என மோடி அரசு இன்னும் தெளிவுபடுத்தவில்லை" என விமர்சனம் செய்து உள்ளார்.
English Summary
reservation for upper classes was Congress victory