மைக்ரோசாப்ட் கிரவுட் ஸ்டிரைக்: இந்திய வங்கிகளுக்கு பாதிப்பா? ரிசர்வ் வங்கி விளக்கம்! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளம் பயன்படுத்தும் பெரும்பாலான பயனர்களுக்கு இன்று புளூ ஸ்கிரீன் (Blue Screen of Death) பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விண்டோஸ் இயங்குதளத்தின் கிரவுட்ஸ்டிரைக் சென்சார் வெர்ஷனில் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக மைக்ரோசாப்ட் சேவைகளில் பிரச்சினை ஏற்பட்டதை கிரவுட் ஸ்டிரைக் (Crowd Strike) உறுதிப்படுத்தி உள்ளதாகவும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த பிரச்னையை சரி செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அதுவரை பயனர்கள் தாங்களாகவே இதனை சரி செய்ய முயற்சிக்க வேண்டாம் என்றும் அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

Crowd Strike தொழில்நுட்பக் கோளாறால் மைக்ரோசாஃப்ட் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியா முழுவதும் 170 விமானங்களும், உலகம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மைக்ரோசாப்ட் குளறுபடியால், வங்கி சேவையில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

மேலும், 10 வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களில் மட்டும் சிறிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பெரும்பாலான வங்கிகள் CrowdStrike-ஐ பயன்படுத்துவதில்லை, சிறிய வங்கிகள் மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மைக்ரோசாப்ட் குளறுபடி குறித்து மதிப்பாய்வு செய்து வருகிறோம். செயல்பாட்டில் பின்னடைவு ஏற்பட்டால் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வங்கிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Reserve bank Say about Microsoft Crowd Strike


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->