பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி: முப்படைகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ள பிரதமர் மோடி..! - Seithipunal
Seithipunal


காஷ்மீர் பஹல்காம் பகுதியில், கடந்த 22-ந்தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தியதில், சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

இந்த கொடூர தாக்குதலை தொடர்ந்து, இந்தியா , பாகிஸ்தான் இடையே பதற்றம் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், நேற்று பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்தார்.

இந்தநிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தருவதற்கான உயர்மட்ட ஆலோசனை கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், முப்படை தளபதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி அவர்கள் கூறியதாவது: 

எதிரிகள் மீது எந்த இடத்தில், எந்த நேரத்தில் எந்த இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதில் முப்படைகள், தாங்களே முடிவு செய்து கொள்ளலாம். எதிரிக்கு பதிலடி தர இலக்குகளை தீர்மானிக்கும் முழு சுதந்திரம் ராணுவத்திற்கு உள்ளது. ராணுவம், படைகள் மீது முழு நம்பிக்கை இருக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிராக மரண அடி கொடுக்க வேண்டியது நமது நாட்டின் உறுதிப்பாடு என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Response to Pahalgam attack Prime Minister Modi has given full freedom to the three forces


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->