முப்படைகளின் தலைமைத் தளபதியாக ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அணில் சவுகான் நியமனம்! - Seithipunal
Seithipunal


முப்படைகளின் தலைமைத் தளபதியாக ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அணில் சவுகானை நியமனம் செய்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முப்படைகளின் தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத், தமிழகத்தின் நீலகிரியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக ராணுவ தளபதி எம்.எம். நரவானே நியமிக்கப்பட்டார். 

பிபின் ராவத் மறைவையடுத்து அடுத்த இந்திய முப்படை தலைமைத் தளபதியாக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி இருந்து வந்தது. 

இந்நிலையில், முப்படைகளின் தலைமைத் தளபதியாக ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அணில் சவுகானை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நாட்டின் ராணுவ விவகாரத் துறை செயலாளராகவும் அனில் செளஹான் பொறுப்பு வகிப்பார் என்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் பதற்றமான சூழல்களில் திறம்பட பணியாற்றிய அனுபவம் கொண்ட அனில் செளஹான், இந்திய ராணுவத்தின் கிழக்கு பிரிவுக்கு தளபதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

retd Lt General Anil Chauhan appointed New Chief of Defence Staff


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->