பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் உள்ளஉள்ள ஐஐடி, என்ஐடி, ஐஐஎம் மற்றும் ஐஐஐடி உள்ளிட்ட மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் மேற்படிப்பு படிக்கும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மாணவ மாணவிகளுக்கு 2 லட்சம் வரை உதவித்தொகை அரசு சார்பில் வழங்கப்படுகிறது.

இந்த உதவித்தொகையை மாணவர்கள் பெறுவதற்கு குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.2,50,000 கீழ் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உதவித்தொகையை பெறுவதற்கு விருப்பமுள்ள மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெறலாம் எனவும், https://bcmbcmw.tn.gov.in இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கி பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கால அவகாசம் (ஜனவரி 31ஆம் தேதி) இன்று கடைசி நாளாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rs 2 lakh scholarship for backward students today last day of apply


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->