டிரோன் மூலம் கைவிடப்பட்ட ரூ.5 லட்சம் பணம், துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் பறிமுதல்.!
Rs 5 lakh cash guns and explosives dropped by drone confiscated in Jammu Kashmir
ஜம்மு காஷ்மீரில் டிரோன் மூலம் கைவிடப்பட்ட ரூ.5 லட்சம் பணம், துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டம் ராம்கார் செக்டாரில் நேற்று காலை பறந்து வந்த ஆளில்லா விமானம் (டிரோன்) ஒன்று ஒரு பையை கீழே போட்டுள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த தகவலையடுத்து விரைந்து வந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் பையை திறந்து பார்த்தபோது, உள்ளே இந்திய ரொக்கப்பணமும், ஆயுதங்களும் இருந்தன. இதில் 500 ரூபாய் நோட்டுகளாக மொத்தம் ரூ.5 லட்சம் இருந்தது.
மேலும் 2 சீன கைத்துப்பாக்கிகள், 60 ரவுண்டு தோட்டாக்களுடன் 4 தோட்டா உறைகள், இணைக்கப்படாத 2 வெடிகுண்டுகள், ஒரு டெட்டனேட்டர், 2 பேட்டரிகள் ஆகியவை இருந்துள்ளன. இவை அனைத்து பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
சர்வதேச எல்லையில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் பாகிஸ்தானில் இருந்து டிரோன் மூலம் அந்த பொருட்கள் போடப்பட்டு உள்ளதாக சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் மகாஜன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து, எல்லை பகுதியில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.
English Summary
Rs 5 lakh cash guns and explosives dropped by drone confiscated in Jammu Kashmir