அயோத்தி ராமர் கோவிலில் ரூ.50 லட்சம் திருட்டு? - Seithipunal
Seithipunal


அயோத்தியில் உள்ள ராம மற்றும் பக்தி பாதைகளில் நிறுவப்பட்டிருந்த 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 36 புரொஜெக்டர் விளக்குகள், 3,800 மூங்கில் விளக்குகள் திருடப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் கடந்த ஜனவரி 22-ஆம் தேதி ராமர் கோயிலை பிரதமர்  மோடி திறந்து வைத்தார்.  கோயில் திறக்கப்பட்டு 6 மாதங்கள் கடந்துள்ள நிலையில், தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி  தரிசனத்திற்காக செல்கின்றனர்.

ராமர் கோயிலுக்கு செல்லும் சாலைகளாக ராம மற்றும் பக்தி பாதைகள் பயன்படுகின்றன. இந்த நிலையில் அயோத்தியில் உள்ள ராம மற்றும் பக்தி பாதைகளில் நிறுவப்பட்டிருந்த 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 36 புரொஜெக்டர் விளக்குகள், 3 ஆயிரத்து 800 மூங்கில் விளக்குகள் ஆகியவை திருடப்பட்டுள்ளன. இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக  போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இது தொடர்பாக அயோத்தி காவல் துறையினர்  செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பேசிய அவர், ராம பாதையில் 6 ஆயிரத்து 400 மூங்கில் விளக்குகளும், பக்தி பாதையில் 96 புரொஜெக்டர் விளக்குகளும் நிறுவப்பட்டிருந்தன. கடந்த மே 9-ஆம் தேதி அந்தப் பாதைகளில் ஆய்வு மேற்கொண்டபோது சில விளக்குகள் மாயமானது தெரியவந்தது.

இதுவரை 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 36 பிரொஜெக்டர் விளக்குகள், 3 ஆயிரத்து 800 மூங்கில் விளக்குகள் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளதாக தெரிவித்தனர். .இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக விளக்குகளை நிறுவிய நிறுவனத்தின் பிரதிநிதி, ராமஜென்மபூமி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rs 50 lakh theft in ayodhya ram temple


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->