ஸ்டார் (*) குறியீடுள்ள 500 ரூபாய் நோட்டு... போலியானதா? - என்ன சொல்கிறது ஆர்பிஐ..?! - Seithipunal
Seithipunal



நட்சத்திரக் குறியீடு கொண்ட 500 ரூபாய் நோட்டு போலியானது என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. எனவே இந்த நட்சத்திரக் குறியீடுள்ள 500 ரூபாய் நோட்டுக்கள் குறித்த அச்சம் பொது மக்களுக்கு எழுந்துள்ளது. 

இந்நிலையில் இந்த நட்சத்திரக் குறியீடு கொண்ட ரூபாய் நோட்டுக்கள் சட்டப் பூர்வமானவை தான் என்று பத்திரிக்கை தகவல் பணியகமான (PIB) தெளிவு படுத்தியுள்ளது. இதுகுறித்து X தளத்தில் ஒரு பதிவில், "நட்சத்திரக் குறியீடு கொண்ட 500 ரூபாய் நோட்டுக்கள் உங்களிடம் இருந்தால், அவை போலியானதா என்பது குறித்த அச்சம் உங்களுக்கு வேண்டாம். 

இந்தக் குறியீடுள்ள ரூபாய் நோட்டுக்கள் முதன் முதலில் 2016ம் ஆண்டு அறிமுகப்படுத்தப் பட்டன. இதுகுறித்து ஏற்கனவே RBI தெளிவான அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் 500 ரூபாய் நோட்டுக்களில் முன்னெழுத்துக்கும், எண்களுக்கும் இடையே உள்ள இடைவெளியில் ஒரு நட்சத்திரக் (*) குறியீடு இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே ரூ. 10, 20, 50 மற்றும் 100 மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்கள் இந்த நட்சத்திரக் குறியீடுடன் புழக்கத்தில் உள்ளன. 

இதுகுறித்த விளக்கம் ஏப்ரல் 2005-2006/1337 என்ற தேதியிட்டு செய்திக் குறிப்பில் தெளிவாகவும், விரிவாகவும் உள்ளது. எனவே 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி முதல் வெளியிடப்பட்ட நட்சத்திரக் குறியீடுள்ள அனைத்து 500 ரூபாய் நோட்டுக்களும் செல்லத்தக்கவை தான்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

அச்சு இயந்திரங்களில் செலவு-செயல்திறனை உறுதி செய்யும் நோக்கில் RBI இந்த நட்சத்திரக் குறியீடு கொண்ட ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறது என்று தெரிய வந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rs 500 Worth Bank Note With Asterisk Sign is Fake What RBI Says


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->