உயிரிழந்த தெலுங்கு தேசம் தொண்டர்களுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி..!!
Rs25 lakh financial assistance for deceased Telugu Desam volunteers
ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று முன்தினம் நெல்லூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நேற்று முன்தினம் இரவு என்.டி.ஆர் சர்க்கிள் அருகே பொதுக்கூட்டம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. சந்திரபாபு நாயுடுவின் பேச்சைக் கேட்க ஏராளமான தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் குவிந்தனர்.
அதேபோன்று சந்திரபாபு சென்ற வாகனத்தின் பின்னால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் பொது மேடை அருகே நிறுத்தப்பட்டதால் சாலையில் இருபுறமும் கூட்ட நெரிசல் உண்டானது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 2 பெண்கள் உட்பட 8 தெலுங்கு தேச கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 5 பேர் நெல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து ஏற்பட்டதன் காரணமாக சந்திரபாபு நாயுடு பேசவிருந்த பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்த சந்திரபாபு நாயுடு தொண்டர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த விபத்தில் உயிரிழந்த தொண்டர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு குடும்பத்தாருக்கு தலா ரூ.15 லட்சம் நிதி உதவி அளிப்பதாக உறுதி அளித்தார். அது போன்று தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தங்கள் சொந்த நிதியிலிருந்து தலா 10 லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
English Summary
Rs25 lakh financial assistance for deceased Telugu Desam volunteers