ரஷ்யா - உக்ரைன் மோதல்! இந்தியா யார் பக்கம்? பிரதமர் மோடி போட்ட டிவிட்! - Seithipunal
Seithipunal


ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன், தனது உக்ரைன் பயணம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓராண்டுக்கு மேல் ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் நடந்து வரும் நிலையில், தற்போது ட்ரோன் மூலம் இரு நாடுகளும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், கடந்த 6 வாரங்களுக்கு முன்பு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்திருந்தார். இதனை தொடர்ந்து கடந்த 23-ம் தேதி முதல்முறையாக உக்ரைன் நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்று அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தார்.

இரு தலைவர்களும் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து ஆலோசனை மற்றும் விவாதம் நடத்தியதாக செய்திகள் வெளியாகின.

மேலும், பேச்சுவார்த்தை மூலமும், தூதரக நடவடிக்கைகள் மூலமும் இந்த போருக்கு தீர்வு காண முடியும் என்பது இந்தியாவின் நிலைப்பாடு என்றும், இதற்காக உக்ரைனும் ரஷ்யாவும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் மோடி ஜெலன்ஸ்கி இடம் தெரிவித்துள்ளார்.

இந்த அமைதிக்கான முயற்சிகளில் இந்தியா தனது பங்களிப்புகளைச் செய்ய தயாராக உள்ளதாகவும், இந்தியா அமைதியின் பக்கம் நிற்பதால், அமைதியான முறையில் மோதலுக்கு தீர்வு காண்பதே மனிதகுலத்துக்குச் சிறந்தது என்று பிரதமர் மோடி ஜெலன்ஸ்கி இடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது உக்ரைன் பயணம் குறித்து ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசியதாக தெரிவித்துள்ளார். 

இது குறித்த அவரின் செய்திக்குறிப்பில், "ரஷ்யா-உக்ரைன் மோதல் குறித்தும், உக்ரைன் பயணத்தின் புரிதல்கள் குறித்து ரஷ்ய அதிபர் புதினுடன் பகிர்ந்துகொண்டேன். அமைதியான தீர்வுக்கு ஆதரவளிப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் அவரிடம் வலியுறுத்தினேன்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia Ukraine War PM Modi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->