சபரிமலை யாத்திரை சென்ற சிறுமிக்கு நேர்ந்த சோகம்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! - Seithipunal
Seithipunal


கேரளா, திருவனந்தபுரம் கட்டாக்கடை பகுதியைச் சேர்ந்த நிரஞ்சனா (வயது 6) என்ற சிறுமி சபரிமலைக்கு தனது தந்தை உடன் யாத்திரை சென்றார். 

பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு அதிகாலை நேரத்தில் நடந்து சென்ற போது நிரஞ்சனாவை பாம்பு கடித்துள்ளது. இதனை அடுத்து சிறுமி பம்பை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அவருக்கு விஷ எதிர்ப்பு ஊசி போடப்பட்டு பின்பு மேல் சிகிச்சைக்காக கோட்டையும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சபரிமலைக்கு செல்லும் பாதையில் சிறுமியை பாம்பு கடித்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதால் கேரள வனத்துறை மந்திரி ஆலோசனை நடத்தி வருகிறார். 

இதனை தொடர்ந்து சன்னிதானத்திற்கு செல்லும் வழிகளில் வனத்துறையைச் சேர்ந்த பாம்பு பிடிப்பவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். 

சபரிமலைக்கு செல்லும் பாதையில் பாம்பு பிடிப்பவர்கள் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். மேலும் வனப்பாதையில் பக்தர்களுக்கு உதவ வன அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sabarimala snake bites 6 year old girl


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->