#BigBreaking || யாரும் பின்வாங்கவில்லை, பின்வாங்கவும் மாட்டோம்.. வதந்தி குறித்து சாக்ஷி மாலிக் ட்விட்..!! - Seithipunal
Seithipunal


ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனையான சாக்ஷி மாலிக், தினேஷ் போகட், பஜ்ரங் குனியா மற்றும் சங்க போகட்டு உள்ளிட்ட பலர் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்யக்கோரி டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மல்யுத்த வீரர்கள் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசி உள்ளனர். மத்திய அமைச்சரும் உடனான இந்த சந்திப்பு நேற்று சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடந்துள்ளது. இந்த சந்திப்பின் போது பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், விக்னேஷ் போகட் உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் அமித் ஷாவை சந்தித்தனர்.

நேற்று இரவு நடைபெற்ற இந்த சந்திப்பிற்கு பிறகு சற்று முன்னர் சாக்ஷி மாலிக் தனது போராட்டத்தை கைவிட்டு அவர் மீண்டும் தனது ரயில்வே பணியில் இணைந்தார் என்ற செய்தி சற்று முன்னர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவ்வாறு வெளியான செய்திக்கு சாக்ஷி மாலிக் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "போராட்டத்தை வாபஸ் பெறுவதாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது.

நீதிக்கான போராட்டத்தில் நாங்கள் யாரும் பின் வாங்கவில்லை பின்வாங்கவும் மாட்டோம். ரயில்வேயில் எனது பொறுப்பை நிறைவேற்றி வருகிறேன். நீதி கிடைக்கும் வரை அகிம்சை வழியில் எங்களது போராட்டம் தொடரும்" என பதிவிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sakshi Malik tweet did not back down from struggle


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->