ஆறு வயதில் ராணுவ வீரர் கனவு.! நாட்டுக்காக இன்னுயிர் கொடுத்த வீரன்.! சோகத்தில் சேலம்.! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதிண்டா ராணுவ முகாமில் நேற்று அதிகாலை 04:35 மணி அளவில் திடீரென துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. இந்த பயங்கர துப்பாக்கி சூட்டில் பீரங்கிப் பிரிவின் நான்கு இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதி முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து, துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த வீரர்கள் சாகர் பன்னே (25), கமலேஷ் (24), யோகேஷ்குமார் (24), சந்தோஷ் நகரல் (25) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் உயிரிழந்த 4 ராணுவ வீரர்களில் 2 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இதில் உயிரிழந்த ராணுவ வீரரான கமலேஷ் சேலம் மாவட்டம், நங்கவள்ளி அருகே பெரிய வனவாசி மசக்காளியூர் பனங்காடு பகுதியை சேர்ந்தவர். இவரது தந்தை நெசவு தொழிலாளி ரவி. தாய் செல்வமணி. இந்நிலையில் கமலேஷ் தனது சிறு வயது முதலே ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவை ஆற்ற வேண்டும் என்று விரும்பினார். 

இதைத்தொடர்ந்து தனது கடுமையான முயற்சியினால் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு ராணுவத்தில் சேர்ந்து தனது விருப்பதை நிறைவேற்றினார். இந்நிலையில் கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்துவிட்டு திரும்பிய கமலேஷ், தற்பொழுது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையேயும், அப்பகுதி மக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், வீரமரணம் அடைந்த வீரர் கமலேஷ் உடல் நாளை சொந்த ஊருக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து ராணுவ வீரர் கமலேஷ் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும். மேலும் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், அவரது வீட்டின் முன்பு திரண்டு கதறி அழுதபடி உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem soldier killed in shooting in Punjab army camp


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->