துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக மணற்சிற்பம் வடிவமைத்த கலைஞர்.! - Seithipunal
Seithipunal


துருக்கியில் கடந்த 3 நாட்களாக அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. அதன்படி இதுவரை நேற்று முன்தினம் முதல் நேற்று வரை 6 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 8000-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.

அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கங்களால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 1.4 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17,000க்கு மேல் தாண்டியுள்ளது. மேலும், கடந்த 84  ஆண்டுகளில் மோசமான பேரிடராக கருதப்படுகிறது.

இந்த நிலையில் துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக ஒடிசாவை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒடிசாவின் பூரி கடற்கரையில் மணல் சிற்பத்தை உருவாக்கி உள்ளார்.

அந்த சிற்பத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற கைகோருங்கள் என்ற வாசகத்துடன் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிறுவனின் உடல் சிக்கி கொண்டது போல உருவாக்கியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sand artist sudharsan Pattnaik art turkey earthquake


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->