உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சஞ்சீவ் கன்னா! - Seithipunal
Seithipunal


உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஓய்.சந்திரசூட்டின் பதவிக்கலாம் நேற்றுடன் முடிவடைந்தது.  இதற்கிடையே,  அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரை செய்ய ஓய்.சந்திரசூட்டிற்கு கடந்த மாதம் மத்திய சட்ட அமைச்சகம் கடிதம் அனுப்பிய நிலையில், அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயரை சந்திரசூட் பரிந்துரை செய்து இருந்தார்.

தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவை நியமித்து உத்தரவிட்டார். இந்த நிலையில், ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற  நிகழ்ச்சியில் சஞ்சீவ் கன்னாவிற்கு  குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்த நிலையில், அவர் 51-வது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து, சஞ்சீவ் கன்னா அடுத்த ஆண்டு மே 13-ம் தேதி வரை பதவியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.,


சஞ்சீவ் கண்ணா, 1960ம் ஆண்டு டெல்லியில் பிறந்து, டெல்லி பல்கலையில் சட்டம் பயின்றார். பின்னர் 1983ம் ஆண்டு டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்ட சஞ்சீவ் கண்ணா, மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி உள்ளார்.

இதற்கிடையே, கடந்த 2004ம் ஆண்டு டெல்லி அரசின் வழக்கறிஞராகவும், டெல்லி ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதியாக கடந்த 2005ம் ஆண்டில் சஞ்சீவ் கண்ணா நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sanjeev khanna sworn in as the new chief justice of the supreme court


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->