மதியம் 3 மணிக்கு யாருமில்லை .. புகைப்படம் எடுத்த வாடிக்கையாளரை எச்சரித்த எஸ்பிஐ வங்கி..!! - Seithipunal
Seithipunal



இந்தியாவின் பிரதான பொதுத்துறை வங்கியாக விளங்கும் எஸ்பிஐ வங்கியானது, வாடிக்கையாளர்களை அதிக நேரம் காக்க வைப்பது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் அவ்வப்போது சிக்குவதுண்டு. மேலும் பொதுத்துறை வங்கிகளின் காசோலைகளில் கூட அந்தந்த மாநில மொழியில் இல்லாமல் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மட்டுமே உள்ளதாகவும் குற்றச்சாட்டு பலமுறை எழுந்துள்ளது.

அந்தவகையில் தற்போது மீண்டும் எஸ்பிஐ வங்கியின் கிளை ஒன்று சர்ச்சையில் சிக்கியுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி எனப்படும் எஸ்பிஐ வங்கியின் ஒரு கிளைக்குச் சென்ற ஒரு வாடிக்கையாளர், மதியம் 3 மணிக்கு வங்கியில் யாருமே இல்லாததைப் பார்த்து அதிர்ந்துள்ளார்.

மேலும் அதை புகைப்படம் எடுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அதில் அவர் இந்த உலகமே மாறினாலும் உங்கள் சேவையின் தரம் இது தான் என்று வங்கியை டேக் செய்து குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவிற்கு பதிலளித்துள்ள வங்கி, வங்கிக்குள் புகைப்படம் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளதால், இந்த புகைப்படத்தை உடனடியாக நீக்கும்படி எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் புகைப்படத்தை பதிவிட்டவர் அந்த வங்கிக் கிளை எந்த பகுதியில் உள்ளது என்று குறிப்பிடவில்லை. இந்நிலையில் தங்கள் தவறை சரி செய்யாமல் தவறை சுட்டிக்காட்டிய நபரை எச்சரித்த வங்கியின் நடவடிக்கைக்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SBI Bank Warned Customer for Taking Picture inside Bank


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->