தேர்தல் ஆணையர் நியமனத்திற்கு எதிரான வழக்கு.! உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல் இந்திய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் அருண் கோயல் நியமனத்தை எதிர்த்து ஜனநாயக சீர்திருத்தத்திற்கான சங்கம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அந்த மனுவில் அருண் கோயல் தன்னிச்சையாக நியமனம் செய்யப்பட்டதாகவும் சுதந்திர அமைப்பான தேர்தல் ஆணைய விதிகளை மீறி நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எஸ்.வி.என் பாடில் ஆகியோர் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு ஏற்கனவே அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வருவதால் இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SC dismissed case against Election Commissioner appointment


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->