மணிப்பூர் விவகாரம்.!! 3 பெண் நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் அதிரடி.!! - Seithipunal
Seithipunal


மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் 3ம் தேதி முதல் இரு சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட வன்முறை தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக மணிப்பூர் மாநில டிஜிபி நேரில் ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

அதன் அடிப்படையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வின் முன்பு மணிப்பூர் கலவரம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது மணிப்பூர் மாநில டிஜிபி நேரில் ஆஜராகினார். மணிப்பூர் மாநிலம் விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்ற போது மணிப்பூர் கலவரம் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து ஆராய முன்னாள் நீதிபதிகள் தலைமையில் குழு அமைக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது.

அதன்படி மணிப்பூர் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் மனிதாபிமான அம்சங்களை மேற்பார்வையிட 3 முன்னாள் உயர்நீதிமன்ற பெண் நீதிபதிகள் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது. ஜம்மு & காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கீதா மிட்டல்  தலைமையிலான குழுவில்  மும்பை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஷாலினி பன்சலார் ஜோஷி மற்றும் டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆஷா மேனன் ஆகியோர் இடம் பெற்றுள்ள குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது. இந்த குழுவானது மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று விசாரணை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SC forms 3 former HC judges committee to Manipur violence victims


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->