#BREAKING:: அதானி குழுமம் விவகாரம்.. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!! - Seithipunal
Seithipunal


அதானி குழுமம் தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதானி குழுமத்தின் பங்குகளின் தொடர் வீழ்ச்சியின் காரணமாக அதன் தலைவர் கௌதம் அதானி உலக பணக்காரர் பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டார். இந்த விவகாரம் குறித்தான உண்மையை வெளியே கொண்டு வர வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்றது. அப்பொழுது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த விவகாரத்தில் உண்மையை வெளி கொண்டுவர குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும். அதானி குழுமம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் ஆலோசனைகளும் சீலிட்ட உரையில் நீதிமன்றத்தில் மத்திய அரசு சமர்ப்பிக்க தயாராக உள்ளது என தெரிவித்திருந்தார்.

அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் நீதிபதிகள் சீலிட்ட உரையில் மத்திய அரசு அளிக்கும் ஆலோசனைகளை நாங்கள் ஏற்க விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் கொஞ்சம் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும். அதானி குழுமம் விவகாரத்தில் முதலீட்டாளர்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது.

எனவே அதற்கான குழுவை நாங்களே ஏற்படுத்திக் கொள்கிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் தோல்வி என கருத முடியாது. அதானி குழுமம் விவகாரம் தொடர்பான குழுவில் உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதிகள் யாரும் இடம் பெற மாட்டார்கள்.

எனவே ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் குழு அமைத்து அதானி குழுமம் மீதான புகார் மற்றும் ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கை முழுமையாக ஆய்வு செய்து விசாரணை நடத்தப்படும் என கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில் அதானி-ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.எம் சாப்ரே தலைமையில் விசாரணை குழு அமைத்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 

மேலும் இந்த குழுவானது அதானி குழுமம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் SEBI தனது முழு அறிக்கையை 2 மாதங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு உச்ச நீதிமன்றம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கௌதம் அதானி "மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அதானி குழுமம் வரவேற்கிறது. இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் இறுதி முடிவைக் கொண்டுவரும். உண்மை வெல்லும்" என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SC order form committee with retired judge AMChabre adani group issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->