SBI-க்கு அடுத்த சிக்கல்.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தேர்தல் பத்திரம் தொடர்பான தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் பத்திரம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும் எனவும் அதனை இந்திய தேர்தல் ஆணையம் உடனடியாக வெளியிட வேண்டுமெனவம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி அரசியல் கட்சிகளுக்கு நிதி உதவி வழங்கிய நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் குறித்தான விவரங்களை மட்டும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் பாரத ஸ்டேட் வங்கி வழங்கிய நிலையில் அதனை நேற்று இரவு வெளியிட்டது இந்திய தேர்தல் ஆணையம். 

இந்த நிலையில் இன்று காலை உச்சநீதிமன்றத்தில் தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தேர்தல் பத்திர எங்களை ஏன் இந்திய தேர்தல் ஆணையத்திடம் வழங்கவில்லை என பாரத ஸ்டேட் வங்கியை உச்ச நீதிமன்றம் சாடியது.

இதனை அடுத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு பாரத ஸ்டேட் வங்கி விநியோகித்த அனைத்து தேர்தல் பத்திர எங்களையும் உடனடியாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும் எனவும் அதனை இந்திய தேர்தல் ஆணையம் பொதுவெளியில் வெளியிட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இதனால் பாரத ஸ்டேட் வங்கிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SC order sbi release election bond numbers


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->