வருகிற 15-ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மூடல் - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


வருகிற 15-ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மூடல் - காரணம் என்ன?

சிக்கிம் மாநிலத்தின் லோனக் ஏரி பகுதியில் ஏற்பட்ட திடீர் மேகவெடிப்பால், மிக குறுகிய நேரத்தில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்தது. இதனால், அங்குள்ள தீஸ்தா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த வெள்ளம் கேங்டாக், மங்கன், பாக்கியாங், நாம்சி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் புகுந்து கடும் சேதங்களை ஏற்படுத்தியது. 14 இடங்களில் உள்ள பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் மேலும் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சிக்கிம் மாநிலத்தில் வரும் 15-ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்படும் என்று அந்த மாநிலத்தின் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், எதிர்பாராத மழை மற்றும் வெள்ள பாதிப்புகள் காரணமாக விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school and college holiday to coming 15th in sikim


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->