நெருங்கிய ரயில்.. தண்டவாளத்தில் சிக்கிய பள்ளி பேருந்து - மாணவர்களின் நிலை என்ன?
school bus stuck railway gate in maharastra
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் காபர்கேடா பகுதியில் நேற்று மாலை பள்ளி பேருந்து ஒன்று 40 மாணவர்களுடன் சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்து அந்த பகுதியில் உள்ள ரெயில்வே கிராசிங் அருகே சென்று கொண்டிருந்த போது சிவப்பு சிக்னல் விழுந்தது. அப்போது பேருந்து ஓட்டுநர் கேட் மூடுவதற்குள் தண்டவாளத்தை கடந்துவிடலாம் என்று பேருந்தை ஓட்டிச் சென்றார்.
அதற்குள் ரெயில்வே கேட் மூடியதால், பேருந்து ரெயில்வே கிராசிங்கின் நடுவில் சிக்கி கொண்டது. அந்த நேரத்தில் மத்திய பிரதேச மாநிலம் சிந்வாரா பகுதியில் இருந்து நாக்பூர் இத்வாரி நோக்கி பயணிகள் விரைவு ரெயில் ஒன்று வந்து கொண்டு இருந்தது. இதைப்பார்த்து மாணவர்கள் உதவி கேட்டு கூச்சலிட்டனர்.
இந்த சத்தம் கேட்ட பொதுமக்கள் உடனடியாக தண்டவாளத்தில் ரெயில் வரும் பாதை நோக்கி ஓடினர். இதைப்பார்த்த ரெயில் ஓட்டுநர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். உடனடியாக ரெயில்வே கேட் திறக்கப்பட்டு பேருந்து தண்டவாளத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது.
ரெயில் ஓட்டுநர் ரெயிலை சிறிது தூரத்திலேயே நிறுத்தியதால், இந்த பெரும் விபத்து தடுக்கப்பட்டது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
school bus stuck railway gate in maharastra