பெண் காவல் அதிகாரியின் ஆவேச செயல் - கல்வித் துறை அதிகாரி வாகனத்தை அடித்து நொறுக்கிய பள்ளி மாணவிகள்! - Seithipunal
Seithipunal


பீகார், வைஷாலி மாவட்டத்தில் உள்ள மனார் பிளாக்இல் அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பள்ளி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். 

போராட்டத்தின் போது அங்கு வந்த காவல்துறை அதிகாரிகளின் வாகனத்தை பள்ளி மாணவிகள் அடித்து நொறுக்கினர். 

மேலும் போராட்டத்தின் போது பெண் காவல்துறை அதிகாரி ஒருவர் பள்ளி மாணவர்களை அடித்ததால் தான் கல்வித்துறை அதிகாரியின் வாகனத்தை முற்றுகையிட்டு அடித்து நொறுக்கியதாக தெரிவித்துள்ளனர். 

படேல் சவுக் சாலையில் மாணவிகள் வாகனங்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளியில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். 

பள்ளி  மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு, போராட்டத்தின் போது கல்வித்துறை அதிகாரியின் வாகனத்தை அடித்து நொறுக்கியதால் அந்த பகுதியில் பதற்றநிலை உருவாகியுள்ளது. இதனால் அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school girls trash officer car protest


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->