பள்ளிகளுக்கு விடுமுறை - இதுதான் காரணமா?
school holiday in jammu kashmir for rain
கடந்த சில நாட்களாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நேற்று அதிகாலை ராம்பன் மாவட்டம் பக்னா கிராமத்தில் திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டதால் அங்கு கனமழை பெய்து, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதில், செனாய் நதிக்கு அருகே உள்ள தரம்குண்ட் கிராமத்தில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி இரண்டு குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். நதியில் இருந்து வெளியேறிய வெள்ளம் கிராமங்களுக்குள் புகுந்து கடும் சேதத்தை ஏற்படுத்தியது.

அதுமட்டுமல்லாமல், மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. சாலையில் பாறைகள், மண்கள் சரிந்து கிடப்பதால் இரண்டு திசைகளிலும் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கனமழை காரணமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கபட்டது.
English Summary
school holiday in jammu kashmir for rain