என்னப்பா இது!!! சட்டசபை சபாநாயகர் இன்று நடந்து கொண்ட விதம் ஜனநாயக படுகொலை....!!!! - எடப்பாடி பழனிச்சாமி
Assembly Speaker behaved today massacre democracy Edappadi Palaniswami
தமிழக சட்டசபையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து சட்டசபையிலிருந்து அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர். அப்போது எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.

அவர் பத்திரிகை நிருபர்களிடம் தெரிவித்ததாவது,"சட்டசபை சபாநாயகர் இன்று நடந்து கொண்ட விதம் ஜனநாயக படுகொலை.ஒரு துறையின் பிரச்சனையை 10 நிமிடத்தில் எப்படி பேசமுடியும்.
ஆக்கப்பூர்வமாக கருத்துகளை தெரிவிப்பதற்கு நேரம் கொடுக்க மறுக்கிறார்கள்.மக்கள் பிரச்சனை பேசுவதற்கு அனுமதி கொடுக்காதது கண்டிக்கத்தக்கது.அ.தி.மு.க. ஆட்சியில் அனைவருக்கும் பேசுவதற்கு நாங்கள் வாய்ப்பு கொடுத்தோம்.
முறையாகத்தான் அனுமதி கேட்டேன். தவறாக இருந்தால் நீக்கி விடுங்கள் என்று தெரிவித்தேன்.டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக யாரும் பதில் தெரிவிக்கவில்லை.
யாரும் பதில் தெரிவிக்காததால் ரூ.1000 கோடி முறைகேடு புகார் நிரூபணம் ஆகிறது.மதுபாட்டிலுக்கு ரூ.10 வீதம் கூடுதலாக விற்பதால் ரூ.5,400 கோடி கிடைக்கிறது" எனத் தெரிவித்தார்.
English Summary
Assembly Speaker behaved today massacre democracy Edappadi Palaniswami