பள்ளிகளிலேயே சாதி சான்றிதழ் வழங்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்..முன்னாள் MLA ஓம்சக்தி சேகர் வலியுறுத்தல்!  - Seithipunal
Seithipunal


சட்டமன்றத்தில் முதல்வர் ரங்கசாமி அறிவித்த நிரந்தர சாதி சான்றிதழ் மற்றும் பள்ளிகளிலேயே சாதி சான்றிதழ் வழங்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வருவாய்த்துறை உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அரசுக்கு அதிமுக உரிமை மீட்பு குழு மாநில கழக செயலாளர் ஓம்சக்தி சேகர் கோரிக்கைவிடுத்துள்ளார்.

இது குறித்து அதிமுக உரிமை மீட்பு குழு மாநில கழக செயலாளர் ஓம்சக்தி சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொது தேர்வுகள் முடிந்த பின்னர் மாணவ,மாணவிகள் தாங்கள் மேல் படிப்பை தொடரவும் வேலை வாய்ப்பு மற்றும் போட்டி தேர்வுகள் ஆகிவற்றுக்கு சாதி மற்றும் குடியிருப்பு சான்றிதழ்கள் அவசியமாகிறது.

ஒவ்வொரு ஆண்டும் பொது தேர்வு முடிவுகள் வெளிவந்த பிறகு மாணவ மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் மேற்கண்ட சான்றிதழ்கள் பெற சம்பந்தபட்ட தாலுகா அலுவலகங்களுக்கு கடும் சிரமங்களுக்கு இடையே  சென்று பெற்று கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

அதிக அளவில் பொதுமக்கள் வரும் தாலுகா அலுவலகங்களில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்படுவதில்லை. கடும் வெயில் போன்ற காலங்களில் பொதுமக்கள் சொல்ல முடியாத துயரங்களை அனுபவிக்கின்றனர்.மேலும் சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் ஆவணங்களை எடுத்து வர சொல்லி பின்னர் தாலுகா அலுவலகம் வரவழைத்து மக்களை அலைக்கழிக்கும் போக்கு இருந்து வருகிறது.

இதுபோன்ற இன்னல்களில் இருந்து பொதுமக்கள் விடுபட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக அதிமுக உரிமை மீட்பு குழு சார்பில் தொடர் கோரிக்கை வைக்கப்பட்டு கடந்த சட்டபேரவை கூட்டத்தொடரில் முதல்வர் அவர்கள் பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்த்திட நிரந்தர சாதி சான்றிதழ் மற்றும் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பள்ளிகளிலேயே ஜாதி சான்றிதழ் வழங்கப்படும் அதுவும் இந்த ஆண்டு முதலிலே வழங்கப்படும் என அறிவித்தார். 

ஆனால் பொது தேர்வுகள் முடிவடைந்து தேர்வு முடிவுகள் அறிவிக்கும் காலம் வந்துவிட்ட பொழுதிலும் அடுத்த கல்வி ஆண்டு துவங்க உள்ள நிலையில் சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை முதல்வரின் அறிவிப்பை செயல் வடிவம் கொடுக்கும் ஆரம்பகட்ட பணிகளை கூட செய்ததாக தெரியவில்லை. மாண்புமிகு முதல்வர் அவர்கள் சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகளை உடனடியாக அழைத்து முதல்வரின் அறிவிப்பு உடனடியாக செயல்பாட்டுக்கு வர வேண்டிய அனைத்து ஊரு வாங்க பணிகளையும் செய்ய வேண்டுமென புதுச்சேரி மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என அரசுக்கு அதிமுக உரிமை மீட்பு குழு மாநில கழக செயலாளர் ஓம்சக்தி சேகர் கோரிக்கைவிடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The scheme of issuing community certificates in schools should be implemented expeditiously Former MLA Omsakthi Shekhar


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->