நாற்காலியில் வெடிகுண்டு - ஆசிரியரை பழிவாங்க யூடியூப் பரந்த மாணவர்கள் சஸ்பெண்ட்.! - Seithipunal
Seithipunal


ஹரியானாவில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் சேர்ந்து தங்களது பெண் அறிவியல் ஆசிரியரின் நாற்காலியின் கீழ் பட்டாசு போன்ற வெடிகுண்டை வைத்து வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் உள்ள பிவானி மாவட்டத்தில் கடந்த வாரம் மாணவர்களை ஆசிரியர் கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மாணவர்கள் யூடியூப்பில் உள்ள வீடியோக்களை பார்த்து வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என்பதை கற்றுக்கொண்டு வெடிகுண்டை தயார் செய்தனர்.

இதனை ஆசிரியரின் நாற்காலியின் கீழ் வைத்துள்ளனர். இந்த நாற்காலியில் ஆசிரியர் அமர்ந்தவுடன் வெடிகுண்டை வெடிக்க செய்யும் கருவியை கொண்டு வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளனர். 

இந்த சம்பவத்தில் ஆசிரியர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பவத்தில் ஈடுபட்ட 13 மாணவர்களை அரியானா கல்வித் துறை ஒரு வாரத்துக்கு இடைநீக்கம் செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school student bomb create in hariyana


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->