காரைக்காலில் ஒரு நாள் ஆட்சியராக பள்ளி மாணவி தேர்வு.! - Seithipunal
Seithipunal


காரைக்கால் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகள், பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல் மற்றும் வளர்ச்சி திட்ட செயல்பாடுகளை நேரடியாக அறிந்து கொள்ளும் வகையிலும் எதிர்காலத்தில் மாணவர்கள் சிறந்த குடிமக்களாக விளங்குவதற்கும் பள்ளியில் சிறந்த மாணவர்களை தேர்வு செய்து ஒரு நாள் ஆட்சியராக பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும் என்று காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், காரைக்கால் மேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி வித்யாஸ்ரீ ஒருநாள் ஆட்சியராக பணியாற்ற முதல் மாணவியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதன் படி மாணவி ஆட்சியர் அலுவலகம் மற்றும் ஆட்சியர் மணிகண்டன் ஆய்வு செய்யும் இடங்களில் மாவட்ட ஆட்சியராக இணைந்து பணியாற்றுவார்.

இதையடுத்து மாணவி வித்யாஸ்ரீ இன்று நடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் ஆட்சியர் மணிகண்டனுடன் இணைந்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். பள்ளி மாணவி ஒருவர் ஒரு நாள் ஆட்சியராக தேர்வு செய்யப்பட்டுள்ளது அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school student select one day collector in karaikkal


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->