மகாராஷ்டிரா : செல்போனை பிடுங்கியதால் ஒன்பதாம் வகுப்பு மாணவி தற்கொலை.!  - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா : செல்போனை பிடுங்கியதால் ஒன்பதாம் வகுப்பு மாணவி தற்கொலை.! 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை நகரில் உள்ள மல்வானி பகுதியைச் சேர்ந்த ஒரு  தம்பதிக்கு பதினைந்து வயது சிறுமி உள்பட நான்கு பிள்ளைகள் உள்ளனர். இதில், பதினைந்து வயதான அந்த சிறுமி ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். 

இந்த நிலையில், அந்த சிறுமி படிக்காமல் அதிக நேரம் செல்போன் பயன்படுத்தி வந்துள்ளார். இதைக்கவனித்த சிறுமியின் பெற்றோரும், உறவினர்களும் சிறுமியை கண்டித்து செல்போனை வாங்கி கொண்டனர். 

இதனால், மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி கடந்த எட்டாம் தேதி தான் வசிக்கும் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். 

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school student sucide in maharastra


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->