இனி சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


வங்கக் கடலில் உருவான 'ஃபெஞ்சல்' புயல் காரணமாக கடந்த 30-ந்தேதி மற்றும் 1-ந்தேதி அன்று கனமழை பெய்தது. இதனால், குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வழக்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

அதிலும் குறிப்பாக டி.என்.பாளையம், அபிஷேகப்பாக்கம், கிருமாம்பாக்கத்தின் ஒரு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆற்றங்கரையோரம் வசித்த பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக கடந்த நவம்பர் 27, 28, 29 உள்ளிட்ட தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் புதுச்சேரியில் புயல்-வெள்ள பாதிப்புகளுக்கு விடுக்கப்பட்ட விடுமுறைகளை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அதன் படி நவம்பர் 27, 28, 29 தேதி விடுமுறையை ஈடுசெய்ய வரும் டிசம்பர் 7, 14, 21-ந்தேதி சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school working day at saturday in puthuchery


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->