1 வருடமாக வேதனை அனுபவித்த பள்ளி மாணவி! வெளிவந்த உண்மையால் பிடிபட்ட 3 சிறுவர்கள்!
schoolgirl molested case 3 boys jail
ஆந்திரா, விஜயநகர மாவட்டத்தில் உள்ள மென்டாடா பகுதி சேர்ந்த மாணவி (வயது 14). இவரது பெற்றோர் வெளியூரில் வசித்து பணியாற்றி வருகின்றனர்.
அதனால் மாணவி அவரது பாட்டி வீட்டில் தங்கி பள்ளிக்குச் சென்று வந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நட்பாக பழகியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு சிறுவன் மாணவியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் சிறுவனின் 3 நண்பர்களிடமும் இதனை தெரிவித்து அவர்களும் மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
கடந்த ஒரு வருடமாக சிறுவர்களின் மிரட்டலுக்கு அடி பணிந்து மாணவி யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார். இதன் காரணமாக சிறுமி வீட்டில் யாரிடமும் பேசாமல் தனிமையான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்.
இதனை கவனித்த அவரது பாட்டி மாணவியிடம் விசாரித்த போது சிறுமி தன்னை அங்குள்ள சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பாட்டி உடனடியாக இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் 4 சிறுவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 சிறுவர்களை சிறையில் அடைத்தனர்.
English Summary
schoolgirl molested case 3 boys jail