கொட்டும் மழை - புதுச்சேரியில் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு..! - Seithipunal
Seithipunal


வங்கக்கடலில் உருவான பெஞ்சல் நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி அருகே கரையை கடந்தது. அப்போதில் இருந்து புதுச்சேரியில் மழை வெளுத்து வாங்கியது. புதுச்சேரி நகர பகுதி மட்டுமல்லாமல் பாகூர், வில்லியனூர், அரியாங்குப்பம், மணவெளி உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது.

மழைநீர் சூழ்ந்த பகுதிகளுக்கு படகுகளில் சென்று, வீடுகளில் தத்தளித்த பெண்கள், குழந்தைகளை பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டு, தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கனமழை பாதிப்புகள் காரணமாக புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நாளை முதல் நடைபெற இருந்த இளநிலை மற்றும் முதுநிலை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

இந்தத் தேர்வுகளின் மாற்றுத் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும். மேலும் 06.12.2024 முதல் திட்டமிடப்பட்ட தேர்வுகளில் மாற்றமில்லை எனவும் முந்தைய அட்டவணையின்படி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

semaster exam postpond in puthuchery for rain


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->