திருப்பதியில் செம்மரக்கடத்தல்.. தமிழர்கள் உட்பட 9 பேர் கைது.. விசாரணை தீவிரம்.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி மாவட்டத்தில் பாக்கராபேட்டைக்கு அருகிலுள்ள வனப்பகுதியில் இருந்து செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் நேற்று நள்ளிரவு முதல் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். 

அப்பொழுது, போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு வேன் வந்துள்ளது. அதை போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வேனில் செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவது கண்டறியப்பட்டது.இதையடுத்து, போலீசார் அவர்களை பிடித்து தொடர் விசாரணை நடத்தினார்கள். 

இந்த வேனை பின் தொடர்ந்து காரில் வந்தவர்களுக்கும் இந்த கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. பின், அவர்களிடமிருந்த கார் மற்றும் சுமார் ரூ.3 கோடி மதிப்பு கொண்ட 33 உயர் ரக செம்மரக்கட்டைகள் 
உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து இந்த, கடத்தலில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த 4 பேர், தமிழகத்தை சேர்ந்த 4 பேர் மற்றும் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ஒரு நபர் என்று மொத்தம் 9 பேரை கைது செய்தனர். இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு வேறு நபர்களுடன் அல்லது வெளிநாட்டு நபர்களுடன் தொடர்பு உள்ளதா என்ற ரீதியில் போலீசார் தொடர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Semmarakadathal in thirupati police arrested


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->