கார் ஒன்று ஆட்டோக்கள் மீது அடுத்தடுத்து மோதியதில் 07 பேர் உயிரிழப்பு; இருவர் கவலைக்கிடம்..!
Seven people died after a car rammed into autos one after another
மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டத்தில் சாப்ரா பகுதி சாலையில் விபத்து ஏற்பட்டதில் 07 பேர் உயிரிழந்துள்ளனர். சாலையில் அதி வேகத்தில் வந்த கார் ஒன்று, எதிரில் வந்த ஆட்டோக்கள் மீது ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து மோதி விபத்தை ஏற்படுத்தியது.
குறித்த விபத்தில் 03 பெண்கள் மற்றும் குழந்தை உட்பட 07 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 08 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதில் இருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தை ஏற்படுத்திய காரின் டிரைவர் காரை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வாகனத்தை விட்டுவிட்டு தப்பி சென்ற கார் டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
Seven people died after a car rammed into autos one after another