அதிர்ச்சி - ஹரியானாவில் கள்ளச்சாராயம் குடித்து 7 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


ஹரியானா மாநிலத்தில் உள்ள யமுனா நகர் பகுதியில் கடந்த புதன்கிழமை அன்று மது அருந்திய இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விசாரணை நடத்துவதற்காக சம்பவ இடத்திற்குச் சென்றபோது, சாராயம் குடித்து தொடர்ந்து 5 பேர் உயிரிழந்தது தெரியவந்தது. 

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் 6 பேரும் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தது வெளிச்சத்திற்கு வந்தது. 

இந்த சம்பவம் தொடர்பாக பேசிய காவல்துறை அதிகாரி, கள்ளச்சாராயம் விற்ற குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட பழைய தொழிற்சாலை ஒன்றை கண்டறிந்துள்ள போலீஸார், அங்கு சாராயம் காய்ச்சி விற்றவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் ஒருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seven peoples died drink liquar in hariyana


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->