ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கடும் வெள்ளப்பெருக்கு! நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் ரூ. 1 கோடி நிவாரணம் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் 50 வருடங்களில் இல்லாத அளவுக்கு கனமழை கொட்டி தீர்த்ததால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழையால் இரு மாநிலங்களிலும் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. அதில் 17 பேர் ஆந்திராவை சேர்ந்தவர்கள், 16 பேர் தெலங்கானாவை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இதனால் அங்கு வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் ஏராளமான மக்கள் தண்ணீரில் தவித்து வருகிறார்கள்.

மேலும். சுமார் 62,000 எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு, வாழை, தக்காளி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தது. அந்தப் பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சேதமடைந்த இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இந்நிலையில், இடைவிடாமல் பெய்த கன மழையின் காரணமாக விஜயவாடா, மொகல்ராஜபுரம், சுண்ணாம்பு மலையில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் அங்கிருந்த வீடுகளின் மீது விழுந்ததில் வீடுகள் தரைமட்டமாகியது. இதனால் ஆந்திரா, தெலுங்கானாவில் செப் 6ம் தேதி வரை 438 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு, மேலும் 137 ரயில் சேவைகள் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, தற்போது ரூ. 1 கோடி நிதியுதவியாக,ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் தலா ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்குவதாக நடிகர் ஜூனியர் என்டிஆர் தனது சமுக வலைதள எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

“அண்மையில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பெய்த கனமழையால் 2 மாநிலங்களில் மிகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பெரும் துயரத்தில் இருந்து மக்கள் விரைவில் மீண்டு வர வேண்டுமென கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். வெள்ளப் பேரிடர் நிவாரணத்திற்காக எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக ரூ. 1 கோடி நிதியுதவியாக, தலா 50 லட்சம் ரூபாயை ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில முதல்வர்களின் நிவாரண நிதிக்கு வழங்குகிறேன்”

இவ்வாறு நடிகர் ஜூனியர் என்டிஆர் அவர் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Severe flooding in Andhra Pradesh and Telangana Actor Junior NDR Rs 1 crore relief announcement


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->