சிறுவர்களுக்கு பாலியல் வன்கொடுமை! பயிற்சி மாஸ்டரை புரட்டி எடுத்த பொதுமக்கள்! வெளியான உண்மை சம்பவம்! - Seithipunal
Seithipunal


கேரளா, திருச்சூர் ஏனமக்கல பகுதியைச் சேர்ந்தவர் அனில் (வயது 52) இவர் கால்பந்து மற்றும் கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளுக்கான பயிற்சி முகாம் நடத்தி வருகிறார். 

மேலும் அவரது வீட்டில் சிறுவர்களுக்கு பயிற்சி அளித்தும் வந்தார். இந்நிலையில் அவரது வீட்டு வழியாக சென்ற பள்ளி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

பாதிக்கப்பட்ட மாணவி நடந்த சம்பவங்களை சக மாணவிகளிடமும் பெற்றோரிடமும் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனில் வீட்டிற்கு சென்று அவரை சரமாரியாக தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ஏராளமான சிறுவர்களை தனது வீட்டில் சிறை பிடித்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்து தெரியவந்தது. 

பின்னர் போலீசார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக அனில் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sexual abuse children training master arrested harassment case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->