எங்கள் அணிக்கு மேலும் இரண்டு எம்பிக்கள் வருவார்கள் - ஷிண்டே தகவல்.! - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டு ஜூன் மாதம் மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40 சிவசேனை எம்எல்ஏக்கள் போா்க்கொடி உயா்த்தினா். இதனால், சிவசேனை அணிகள் இரண்டு அணிகளாக பிளவுபட்டது.

இதில், ஏக்நாத் ஷிண்டே தரப்பு தாங்கள் தான் உண்மையான சிவசேனை என்றது. இதையடுத்து, இரண்டு அணிகளும் கட்சியின் பெயா், சின்னத்துக்கு  உரிமை கோரியது. இந்த நிலையில், தோ்தல் ஆணையம் கடந்த வெள்ளிக்கிழமை ஷிண்டே பிரிவு சிவசேனைக்கு அங்கீகாரம் வழங்கியது. 

தோ்தல் ஆணையத்தின் இந்த முடிவை விமா்சனம் செய்த உத்தவ் தாக்கரே, அதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம் என்று தெரிவித்தாா். இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தில் இரு அணிகளும் தங்களுக்கு ஆதரவாக உள்ள எம்.எல்.ஏ., எம்.பி.க்களின் ஆதரவு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தனர். 

இந்த பத்திரத்தில், உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த ஆறு எம்.பி.க்களில் நான்கு பேர் மட்டுமே அவருக்கு ஆதரகவாக பிராமண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். இதனால், அந்த இரண்டு எம்.பி.க்களும் தங்கள் அணிக்கு வருவார்கள் என்று ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக ஷிண்டே தரப்பு எம்.பி. கிருபால் துமனே தெரிவித்ததாவது, "உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவாக இரண்டு எம்.பி.க்கள் தேர்தல் ஆணையத்தில் பிராமண பத்திரம் தாக்கல் செய்யவில்லை என்ற தகவலை சஞ்சய் ரெளத் எம்.பி. மறுத்துள்ளார்" என்று அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shinde says Two more MPs will be joining my team


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->