2 பேர் மீது துப்பாக்கிச்சூடு!...மேற்கு வங்காளத்தில் வெடித்த பாஜகவினரின் போராட்டம்!
Shot on 2 people BJP protests broke out in West Bengal
கொல்கத்தாவில் உள்ள கே.ஜி.கர் மருத்துவமனையில் இரவுப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் மருத்துவர், கடந்த 9ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே நாடு முழுவதும் மருத்துவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதவி விளக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தது. இந்நிலையில், சத்ர சமாஜ் என்ற புதிதாக உருவாக்கப்பட்ட மாணவர் அமைப்பு, நபன்னா அபியான் என்ற பெயரில் அரசை கண்டித்து நேற்று நடத்திய பேரணியில், பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த தடுப்பான்களை தாக்க முற்பட்டனர்.
ஹவுரா பாலம், சான்டிராகாச்சி ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டக்காரர்கள் சிலரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்த சூழலில் மேற்கு வங்காளத்தில் 12 மணிநேர பந்திற்கு பா.ஜ.க. இன்று அழைப்பு விடுத்தது. இதன்படி, பஸ்கள் மறிக்கப்பட்டன.
ரெயில் நிலையத்தில் தண்டவாளங்களின் குறுக்கே நின்றும் போராட்டம் நடத்தப்பட்டது.இந்நிலையில், எதிர்க்கட்சியான பா.ஜ.க. இன்று வெளியிட்ட செய்தியில், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பட்பாரா பகுதியில், எங்களுடைய தொண்டர்கள் 2 பேரை சுட்டு விட்டனர் என தெரிவித்து உள்ளது.
English Summary
Shot on 2 people BJP protests broke out in West Bengal