விலங்குகள் மீது கருணை காட்டுங்கள்....! பிரதமர் மோடி வேண்டுகோள்....
Show mercy to animals Prime Minister Modi appeals
பிரதமர் மோடி நேற்று குஜராத்தில் உள்ள கிர் தேசிய வனவிலங்கு சரணாலயத்திற்குச் சென்று லயன் சவாரி பயணம் மேற்கொண்டார். ஜாம்நகரில் ரிலையன்ஸ் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள 'வன்தாரா 'விலங்குகள் நலவாழ்வு மையத்திற்குச் சென்று அங்குள்ள விலங்குகளை பார்வையிட்டார்.

பிரதமர் மோடி:
பிறகு அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, " ஆசிட் வீசப்பட்டுப் பாதிக்கப்பட்ட யானையைப் பார்வையிட்டேன். அந்த யானைக்கு நல்ல சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் வேட்டைக்காரர்களால் கண் பார்வையை இழந்த யானைகளும் அங்கு இருந்தன. டிரக் மோதியதில் காயம் அடைந்த யானையும் அங்கு உள்ளது. இது போன்ற விஷயங்கள் விலங்குகள் மீது எப்படிக் கவனக்குறைவாகும், கொடூரமாகவும் நடந்து கொள்ள முடியும். இந்தப் பொறுப்பற்ற தன்மைக்கு முடிவு கட்டுவதுடன் அனைவரும் விலங்குகள் மீது கருணைக் காட்டுவோம்.
சிகிச்சை:
அதேபோன்று வாகனம் மோதியதில் காயமடைந்த சிங்கத்திற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் குடும்பத்தினரால் கைவிடப்பட்ட சிறுத்தைக் குட்டிக்கும், தகுந்த உணவுடன் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றன " என அவர் தனது எக்ஸ் பதிவுகளில் தெரிவித்துள்ளார்.
English Summary
Show mercy to animals Prime Minister Modi appeals