உடல்நலம் சரியாக நிர்வாண பூஜை - போலி சாமியார் செய்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


உடல்நலம் சரியாக நிர்வாண பூஜை - போலி சாமியார் செய்த கொடூரம்.!

தெலங்கானா மாநிலம், மஞ்சிரியாலா மாவட்டத்தில் உள்ள சென்னூர் நகரைச் சேர்ந்தவர் தாசரிமது. பல மாதங்களாக உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதையறிந்த போலி சாமியார் ஒருவர் இவரது உடலில் தீயசக்தி சேர்ந்துள்ளதாகவும், அது வெளியேறும் வரை நலம் பெற மாட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனை உண்மை என்று நம்பிய தாசரிமதுவின் குடும்பத்தினர் சாமியார் தெரிவித்தபடி மாந்திரீக பூஜை செய்ய ஒப்பு கொண்டனர். இதையடுத்து அந்த போலி சாமியார் அவரை கோதாவரி ஆற்றின் அருகே அழைத்து சென்று  பூஜை என்ற பெயரில் நிர்வாணப்படுத்தி அடித்து கொடுமைப்படுத்தி உள்ளார். 

இதில் தாசரிமது சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்து அச்சமடைந்த உறவினர்கள் போலி சாமியார் உடன் சேர்ந்து  இறுதிச்சடங்கு செய்ய திட்டமிட்டனர். இதற்கிடையே தாசரிமது உடன் சென்ற உறவினர் ஒருவர், போலி சாமியார் பூஜை செய்தபோது ரகசியமாக தனது செல்போனில் வீடியோ எடுத்திருந்தார். 

அதனை அந்த நபர் போலீஸூக்கு அனுப்பினார். இதைப்பார்த்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தாசரிமது உடலை தகனம் செய்வதை நிறுத்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலி சாமியார், அவருடன் இருந்தவர்கள் மற்றும் தாசரிமதுவின் குடும்பத்தினர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sick man death in telungana for pooja


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->