திகார் சிறையில் ஆம் ஆத்மி அமைச்சருக்கு சகல வசதி சர்ச்சைக்குறித்து விளக்கம் அளித்த சிஷோடியா! - Seithipunal
Seithipunal


டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சத்யேந்திர ஜெயின் மற்றும் அவர் குடும்பத்தார் மீது கடந்த 2017ம் ஆண்டு ரூ.1.62 கோடி வரை பண மோசடி செய்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. அதன் அடிப்படையில் பண மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது. விசாரணை அடிப்படையில் டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினை கடந்த மே மாதம் அமலாக்க துறையினர் கைது செய்தனர்.

அவர் மீது ஹவாலா பண பரிமாற்றம் மற்றும் கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனத்தின் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை அவரை கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைந்துள்ளது. இந்த நிலையில் சிறையில் உள்ள அமைச்சருக்கு சிறை விதிகள் மீறி சொகுசு வசதிகள் வழங்கப்படுவதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இந்த சம்பவம் குறித்து சிலை துறை கண்காணிப்பாளர் அஜித்குமார் கடந்த வாரம் பணியிட நீக்கம் செய்யப்பட்டார். 

இதுநிலையில் இருக்கும் டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு ஒருவர் மசாஜ் செய்யும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை உண்டாக்கியுள்ளது. இந்த நிலையில் அவருக்கு முதுகு தண்டில் ஏற்பட்ட காயம் காரணமாக இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டதாக டெல்லி துணை முதல்வர் மணி சிசோடியா விளக்கமளித்துள்ளார். டெல்லியில் உள்ள திகார் சிறையில் அவருக்கு சகல வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sisodia explains that Satyendra Jain is being given physiotherapy treatment


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->