டெல்லி விமான நிலையத்தில் 6 தோட்டாக்களுடன் வந்த அமெரிக்கர் கைது.!! - Seithipunal
Seithipunal


டெல்லி விமான நிலையத்தில் 6 தோட்டாக்களுடன் வந்த அமெரிக்கர் கைது.!!

நாட்டின் தலைநகரான டெல்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து வெளி நாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. 

இந்த விமானங்களில் பயணம் செய்வோர் சட்ட விரோதமாக தங்கம், வெளிநாட்டு கரன்சி உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்கின்றனர். இந்தக் கடத்தலைத் தடுக்கும் விதமாக சுங்கத் துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 22ம் தேதி அன்று அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் பின்லாந்தில் உள்ள ஹெல்சின்கிக்கு விமானத்தில் பயணம் செய்வதற்காக விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அங்கு அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது அந்த நபரின் பையில் பயன்படக்கூடிய ஆறு துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் அதிகாரிகள் அந்த நபரை டெல்லி காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அந்த நபரை கைது செய்து ஆயுதச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

six bullets seized in delli international airport


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->