வெடித்தது வன்முறை - வங்காளதேசத்தில் 6 மாணவர்கள் உயிரிழப்பு.!
six students died in bangaladesh for violence
வங்காளதேசத்தில் அரசு வேலைவாய்ப்புகளில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் 30 சதவீத இட ஒதுக்கீட்டில் முறைகேடு ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக டாக்கா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது இந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து டாக்காவில் உள்ள ஜகாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இவர்களுக்கு எதிராக ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவினர் போராட்டத்தில் குதித்தனர்.
அப்போது, இரு தரப்பினர் இடையே வன்முறை ஏற்பட்டதில் 15 போலீசார் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்களில் 6 மாணவர்கள் உயிரிழந்தனர். இதனால் ஜகாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு கருதி ஏராளமான போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், டாக்காவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'நாட்டில் நிலவும் சூழலை கருத்தில் கொண்டு, வங்காளதேசத்தில் உள்ள இந்திய சமூகத்தினர் மற்றும் மாணவர்கள் தங்கள் வளாகத்தை விட்டு வெளியே செல்வதைக் குறைக்கவும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது' என்று தெரிவித்துள்ளது.
English Summary
six students died in bangaladesh for violence