இறந்து கிடந்த 6 வயது சிறுமி - விசாரணையில் சிக்கிய சித்தி - கேரளாவில் பயங்கரம்.! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தில் ஆறு வயது சிறுமியை சித்தியே கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் கொத்தமங்கலம் அருகே உள்ள நெல்லிக்குழியில் வசித்து வந்தவர் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அஜாஸ் கான். அஜாஸ் கானின் இரண்டாவது மனைவி அனீஷா. இவருடைய முதல் மனைவியின் மகள் முஸ்கான். 

இவர் கடந்த 19 ஆம் தேதி அன்று காலை தனது வீட்டில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி விரைந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமியின் சித்தி அனீஷா புதன்கிழமை இரவு கணவர் இல்லாதபோது குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றதை ஒப்புக்கொண்டார். இதை கேட்டு அதிர்ச்சோயடைந்த போலீசார் அவரை கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

six years old girl died in kerala


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->