திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை தாக்கி 6 வயது சிறுமி உயிரிழப்பு.!
six years old goirl died in tirupati for leopard attack
திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை தாக்கி 6 வயது சிறுமி உயிரிழப்பு.!
ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தெலங்கானா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதிலும் குறிப்பாக சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் பலமணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே திருப்பதி மலைப்பாதையில் கடந்த சில நாட்களாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இது பாதாயாத்திரையாக நடந்து வரும் பக்தர்களை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சின்னாரி என்பவர் குடும்பத்தினருடன் அலிபிரி மலைப்பாதை வழியாக திருமலைக்கு நடந்து சென்றுகொண்டிருந்தபோது சிறுத்தை ஒன்று ஆறு வயது சிறுமியை கவ்விக்கொண்டு ஒரு புதருக்குள் ஓடியது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமின் பெற்றோர் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், இரவு நேரம் என்பதால் தேடுதல் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலையில் இன்று காலை போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதையடுத்து சிறுமி நரசிம்ம சாமி கோயில் அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அலிபிரி மலைப்பாதையில் அவ்வப்போது சிறுத்தைகள் நடமாட்டம் அதிகிரித்து வருவது மலையேறி சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களிடையே பயத்தை அதிகரித்துள்ளது.
அதனால், பக்தர்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை பிடிக்கவும் பக்தர்கள் பயமின்றி மலையேறிச் செல்லவும் பாதுகாப்பு வசதிகளை தேவஸ்தான நிர்வாகம் ஏற்படுத்தி தர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
six years old goirl died in tirupati for leopard attack