குடோனில் பதுக்கப்பட்ட ரூ.16.75 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல்.!
sixteen lakhs liquar seized in maharastra
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டம் லோனாட்டில் ஒரு குடோனில் மதுபானம் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக கலால் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த குடோனில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.16.75 லட்சம் மதிப்புள்ள மதுபானத்தை போலீசார் பறிமுதல் செய்து, அங்கு நிறுத்தப்பட்டு இருந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து, போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை கைது செய்தனர். இருப்பினும், இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியை போலீசார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
இதற்கிடையே பறிமுதல் செய்யப்பட்ட இந்த மதுபானங்கள் டாமன் மற்றும் அரியானா மாநிலத்தில் தயாரிக்கப்பட்டவை என்பதும், இவற்றை மகாராஷ்டிரா மாநிலத்தில் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
English Summary
sixteen lakhs liquar seized in maharastra